உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 23, 2026 11:32 PM
அ நிறம் | அளவு
'த மிழகத்தில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் குறித்து, முழுமையான அறிக்கை தயாரிக்க, மேலும் நான்கு வாரம் அவகாசம் வேண்டும்' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், நீர்வளத்துறை மனு செய்துள்ளது.
'வி தியை மீறி அதிக விலைக்கு ஆட்டோக்கள் விற்கும், வாகன விற்பனை முகவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக போக்குவரத்து ஆணையர் தாமஸ் வைத்யன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செ ன்னை, சேப்பாக்கத்தில் உள்ள, ஆதிதிராவிடர் நல இயக்குனரகத்தில், விடுதி மாணவர்களின் குறைகளை கேட்க, 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, நேற்று திறந்து வைத்தார்.
