ADDED : செப் 25, 2026 03:23 AM
சென்னை, கோவை உட்பட பல்வேறு இடங்களில், மின் வாரிய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், ஆக., 16 முதல் 31ம் தேதி வரை ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், 79 மின் திருட்டுகள், 12 விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட நபர்களிடம் இருந்து, 1.01 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மேட்டுப்பாளையம், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், போடிநாயக்கனுார், பட்டுக்கோட்டை, கோபிசெட்டிப்பாளையம், ஆம்பூர், துறையூர் நகராட்சி கமிஷனர்களும், நாகர்கோவில் மாநகராட்சி துணை கமிஷனரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி பிறப்பித்துள்ளார்.
திருச்சியில் இருந்து குவைத்துக்கு இயக்கப்பட்ட, நேரடி விமான சேவைகள், சில மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டன. தற்போது, சென்னை, பெங்களூரு, மும்பை வழியாக, திருச்சியில் இருந்து குவைத் செல்லும் நிலை உள்ளது. நேரடி விமானம் இல்லாததால் டிக்கெட் கட்டணம் அதிகமாகிறது. எனவே, இந்திய விமான நிறுவனங்கள், திருச்சியிலிருந்து குவைத்திற்கு நேரடி சேவை வழங்க முன்வர வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.
