UPDATED : அக் 12, 2026 09:18 PM
ADDED : அக் 12, 2026 08:18 PM

திருப்பத்துார்: பார்சாம்பேட்டை சோலையூரைச் சேர்ந்தவர் கவியரசு மகன் கவின், 11. தனியார் பள்ளியில், 6ம் வகுப்பு படித்தார். ‘யூ டியூப்’ பார்த்து, ‘தின்னர்’ மற்றும் மண்ணெண்ணெயை பற்றவைத்து பரிசோதனை செய்தபோது தீப்பிடித்ததில், பலத்த காயமடைந்து, நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
ஈரோடு: கொங்கர்பாளையம் குண்டேரிப்பள்ளம் அணையில், அக்., 9ம் தேதி இரவு தண்ணீர் குடிக்க வந்த, 40 வயது பெண் யானை, சேற்றில் சிக்கியது. டி.என்.பாளையம் வனத்துறையினரால் மீட்கப்பட்டு, தொடர் சிகிச்சையில் இருந்த யானை, நேற்று காலை இறந்தது. உடற்கூராய்வுக்கு பின், அணை அருகே புதைக்கப்பட்டது.
கடலுார்: புதுக்குப்பத்தைச் சேர்ந்த ரவி, 56, என்பவர், 5 வயது சிறுமியை, 2024ல் வன்கொடுமை செய்ததால் கைது செய்யப்பட்டார். அவர் மீது, கடலுார் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ரவிக்கு, 26 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிபதி குலசேகரன் தீர்ப்பு அளித்தார்.
