தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஆணுக்கு எதிராக...498ஏ ஐபிசி (வரதட்சணை கொடுமை)

ஆணுக்கு எதிராக...498ஏ ஐபிசி (வரதட்சணை கொடுமை)

ஆணுக்கு எதிராக...498ஏ ஐபிசி (வரதட்சணை கொடுமை)


PUBLISHED ON : நவ 30, 2014 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 30, 2014 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வரதட்சிணை ஒழிப்பு சட்டங்கள்(THE DOWRY PROHIBITION ACT, 1961), சட்டப்பிரிவுகள் எவையுமே ஆணுக்கும் அரசுக்கும் இடையேயான மோதலாகவே இருக்கிறது. காரணம் இது சார்ந்த சட்டப்பிரிவுகள் பெண்ணின் சார்பில் அவளுக்கு உதவும் நோக்கில் செயல்படுகின்றன.திருமணம் எனும் பந்தத்தில் ஒற்றை ஆளான பெண்ணை பலப்படுத்த துணைக்கு வந்த சட்டம் இப்போது அதன் Counter Part ஆன ஆணினை தனிமைபடுத்தியதாலேயே இந்த சட்டப்பிரிவு தவறாக உபயோகிக்கப்பட முடிகிறது. அவனும் குழு சேர்க்கிறான்.திருமண பந்தத்தில் விவாகரத்து எனும் நிலை வரும் வரையில் பெண் தனியாள்தான். ஆனால் விவாகரத்து எனும் புள்ளியைத் தொட்டபின் அவளுக்குத் துணையாக சட்டம் அவள் குடும்பம், குழந்தை என வருகிறது.

ஆணுக்கு அவன் விவாகரத்து எனும் புள்ளியைத் தொடும் வரைதான் உறவு. அதன் பின் அவன் நிச்சயம் தனிமைப்பட்டுத்தான் போகிறான். அதுவரை கூட இருந்த சகோதர சகோதரிகள் அவரவர் வேலையில் கவனமாக பிரிந்துவிடுவார்கள். பெற்றோர் காலம் சில வருடங்க்கள் மட்டுமே. எனவே, அவனுக்கு இன்னுமே மனதளவில் ஆதரவு தேவைப்படுகிறதுதான்.

குடும்ப வன்முறைச் சட்டம் (Protection of Women from Domestic Violence Act 2005) எப்படிப் பெண்ணைப் பாதுகாக்கிறதோ அது போலவே, குடும்பத்திற்குள் ஆணுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்காக அவர்களைப் பாதுகாக்க என தனி சட்டம் கிடையாது. பொதுவான மற்ற சட்டங்களைக் கொண்டே அவர்கள் தன் உரிமையை நிலை நாட்டிக் கொள்ளலாம்.எப்பொது ஒருவருக்கு உதவியும் துணையும் தேவைப்படுகிறது?அவர் எப்போது தனிமைப்படுகிறாரோ அப்போது.பெண்ணுக்கு எதிராக குடும்பத்திற்குள் நிகழும் வன்முறைகளுக்கெதிராக பல சட்டங்கள் வந்ததற்கான காரணம் இந்திய குடும்ப அமைப்பைப் பொறுத்த வரை திருமணத்திற்குப் பிறகு பெண்ணானவள் தனியொருத்தியாக, அந்த புருஷனின் வீட்டில் நுழைகிறாள். இனி அதுவே அவளது வீடு. அதுவே அவளது குடும்பமாக அவள் எண்ணி வாழ வேண்டும். ஆக, அங்கே அவள் தனியளாக இருப்பதால் அங்கே அவள் கொடுமைப்படுத்தப்பட்டால் அவளுக்கு ஆதரவாக எவருமே இல்லை.

அந்த நிலை காலங்காலமாக நீடித்ததாலேயே, பெண்கள் அமைப்புகள் ஒன்று கூடி, அவளுக்கு உதவும் வகையில் போராடி, சட்ட உதவியாவது அவளுக்குக் கிடைக்கட்டும் எனும் எண்ணத்தில் சட்ட திருத்தங்களும், குடும்ப வன்முறைச்சட்டம் போன்ற புதிய சட்டங்களும் கொண்டு வந்தன.இப்போது குடும்ப வன்முறைச் சட்டத்தின் படி, ஒரு பெண், ஆணுக்கு எதிராக மட்டுமே புகார் தர இயலும். அதாவது பெண்ணுக்கு மட்டுமே பாதுகாப்பு. அப்படியாயின், ஆணுக்கு குடும்பத்திற்குள் வன்முறை ஏதும் நிகழ்வதே இல்லையா? நிகழலாம். அப்படி நிகழ்ந்தாலும், அது அவன் பிறந்ததிலிருந்து இருந்த குடும்பம் என்பதால் அவனால் சமாளிக்க இயலும். அவன் தனியன் இல்லை. ஆனால்...இந்திய குடும்பத்தில் பெண்தான் போய் ஆணின் குடும்பத்தில் இணைகிறாள். அதனால், அவளுக்கு குறைந்த பட்சம் சட்டத் துணையாவது இருக்கட்டும் எனும் வாதம் ஏற்கத்தக்கதே. ஆனால், சட்டத்தின் துணை கொண்டு அவள் கூட்டத்தோடு இருக்கும் ஆணை பழிவாங்கவும் முடிகிறது. அதனாலேயே அவனும் தனிமைப்பட்டு, குழு அமைக்கிறான். ஆண்கள் அமைப்பை உருவாக்குகிறான்.ஆமாம். குடும்ப வன்முறைச் சட்டம் போலவே, வரதட்சிணைக் கொடுமை என்று சொல்லி ஒரு பெண் ஆண் மீது பொய் புகார் கூட அளிக்க முடியும். ஏனெனில், இந்திய பீனல் கோடு 498a -ன் படி, வரதட்சிணைப் புகாருக்கு மனைவியின் புகார் மட்டுமே போதுமானது. வேறு பெரிய நிரூபணங்கள் தேவை இல்லை.அதனாலேயே பெண்ணுக்கு கணவனைப் பிரிய நினைத்தால், அல்லது அவனையோ அவனது குடும்பத்தையோ பழி வாங்க நினைத்தால் இந்த சட்டப்பிரிவை பயன்படுத்துவதும் நிகழ்கிறது. ஒவ்வொரு வருடமும் தோராயமாக அறுபத்தையாயிரம் வரதட்சிணைப் பொய் புகார்கள் வருவதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.வரதட்சிணைப் புகார் என்பது cognizable அதாவது குற்றஞ்சாட்டப்பட்டவர் வாரண்ட் ஏதும் இல்லாமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம். non - compoundable எனில் குற்றஞ்சாட்டியவர் விருப்பத்தின் பேரில் கொடுத்த புகாரை திரும்பப் பெற முடியாது. வரதட்சணைப் புகார் non-bailable . அதாவது குற்றஞ்ச்சாட்டப்பட்டவரை பெயிலில் விட முடியாது என மாஜிஸ்ட்ரேட் உத்தரவிடலாம்.

வரதட்சிணைப் புகார் என்பது (3வருடம் வரையான) சிறைத்தண்டனை http://indiankanoon.org/doc/538436/ பெற்றுத் தரத்தக்கது.

இதன் காரணமாக பொய்யான வரதட்சணைப் புகாரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக இந்திய சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரால் INDIAN MEN'S RIGHTS MOVEMENTஒன்று 1988 முதல் நடந்து வருகிறது இதன் நோக்கமானது பொய் வரதட்சிணைப் புகாரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி அளிப்பதுவே. இதை Crime against Man Cell அல்லது Society for Prevention of Cruelty to Husbands என அழைக்கின்றனர்.National Coalition for Men (USA)-, பொய்யான வரதட்சணைப் புகார்(இந்திய பெங்க்களூரு பிரிவு), குழந்தையின் மீதான தந்தையின் உரிமை போன்றவற்றிற்காக உதவி வருகிறது.Child Rights Initiative for Shared Parenting (CRISP) எனும் இயக்கம் ஒரு குழந்தையின் மீதான தந்தையின் உரிமைக்காகவும் போராடி வருகின்றன. www.crisp-india.org)Arunesh Kumar's வழக்கிற்குப் பின்..சட்டப்படி, வரதட்சணைக் குற்றத்திற்கு வாரண்ட் இல்லாமல் கைதும் சிறையும் வாய்க்கலாம் எனினும், Men's Rights Movement வழங்கிய ஆலோசனையின் படி, பல மானிலங்க்களும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளன. அதில் 8 குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.அதாவது, வரதட்சணைப் புகாருக்காக ஒருவரைக் கைது செய்யும் முன் DCPயின் அனுமதி பெற வேண்டுமென்பதே அது. (சமீபத்திய தகவலின் படி, compoundable ஆக மாற்றப்பட முன் மொழியப்பட்டுள்ளது)மேலும், விசாரணை இன்றி செய்யப்பட்ட கைது நடவடிக்கைக்காக காவல் அதிகாரியும், ஜுடிசியல் மாஜிஸ்ட்திரேட்டும் துறைபூர்வ விசாரணைக்கும், நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்கும் ஆளாகலாம் என சமீபத்தில் (ஜுலை 14) சுப்ரீம் கோர்ட் சுற்றரிக்கை அனுப்பியுள்ளது.(· State governments are to instruct police officers against routine arrests under Section 498A and to fulfill conditions under Section 41 of the CrPC· Provide a checklist of Section 41 sub clauses to all police officers· That checklist should be filled and appended with reasons and materials to support arrest, and forwarded by police officers to magistrates· Magistrates will peruse this forwarded report and record their satisfaction before ordering detention· The decision not to arrest an accused, with written reasons for the same, will be forwarded to the magistrate within two weeks from the date of the institution of the case· Notice of appearance in terms of Section 41A of Cr.PC will be served on the accused within two weeks from the date of institution of the case, with written reasons· Police officers will be liable for departmental action and punishable for contempt by the high court for failure to comply with these directions· Magistrates authorizing detention without recording reasons will be liable for departmental action by the high court)இதுவரை வரதட்சிணைப் புகாரின் சட்டப்பக்கத்தைப் பார்த்தோம்.

உண்மையில்..? சமூக அளவில்?உளவியல்படி?-ஹன்ஸா, அட்வகேட்

திருமணம் எனும் பந்தத்தில் ஒற்றை ஆளான பெண்ணை பலப்படுத்த துணைக்கு வந்த சட்டம் இப்போது அதன் Counter Part ஆன ஆணினை தனிமைபடுத்தியதாலேயே இந்த சட்டப்பிரிவு தவறாக உபயோகிக்கப்பட முடிகிறது. அவனும் குழு சேர்க்கிறான்.திருமண பந்தத்தில் விவாகரத்து எனும் நிலை வரும் வரையில் பெண் தனியாள்தான். ஆனால், விவாகரத்து எனும் புள்ளியைத் தொட்டபின் அவளுக்குத் துணையாக சட்டம் அவள் குடும்பம், குழந்தை என வருகிறது.ஆணுக்கு அவன் விவாகரத்து எனும் புள்ளியைத் தொடும் வரைதான் உறவு. அதன் பின் அவன் நிச்சயம் தனிமைப்பட்டுத்தான் போகிறான். அதுவரை கூட இருந்த சகோதர சகோதரிகள் அவரவர் வேலையில் கவனமாக பிரிந்துவிடுவார்கள். பெற்றோர் காலம் சில வருடங்கள் மட்டுமே. எனவே அவனுக்கு இன்னுமே மனதளவில் ஆதரவு தேவைப்படுகிறதுதான்.அவர்களும் சமூகத்தின் ஒரு அங்கம் அல்லவா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us