தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மெஹ்தி மீதான வழக்குக்கு ஆதாரம்: போலீஸ் விசாரணையில் உறுதி

மெஹ்தி மீதான வழக்குக்கு ஆதாரம்: போலீஸ் விசாரணையில் உறுதி

மெஹ்தி மீதான வழக்குக்கு ஆதாரம்: போலீஸ் விசாரணையில் உறுதி


UPDATED : ஜன 26, 2015 01:42 AM

ADDED : ஜன 26, 2015 12:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 26, 2015 01:42 AM ADDED : ஜன 26, 2015 12:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, 'ஷமி விட்னெஸ்' என்ற டுவிட்டர் கணக்கை இயக்கியதாக, மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் மீது வழக்கு பதிவு செய்ய தேவையான ஆதாரங்கள் உள்ளதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புக்கு ஆதரவாக, டுவிட்டர் கணக்கை இயக்கியதாக மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ், கடந்தாண்டு டிசம்பர் 13ம் தேதியன்று, பெங்களூரு, கங்கமனகுடி போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக, 'ஷமி விட்னெஸ்' என்ற பெயரில், டுவிட்டர் கணக்கை இயக்கி வந்தது தெரியவந்தது. இவரை கைது செய்தபோது கணக்கை, 17 ஆயிரம் பேர் பின் தொடர்ந்தனர். டுவிட்டர் கணக்கு பக்கத்தில் இருந்த அனைத்து தகவல்களையும் போலீசார் மீண்டும் மீண்டும் பரிசீலனை செய்து வருகின்றனர்.

போலீசார் கூறியதாவது:பரிசீலனை செய்வது சாதாரண விஷயமல்ல; பெரும்பாலான தகவல்கள், அரபு மொழியில் இருந்ததால், சவாலாகவே இருந்தது. மெஹ்தி நேரடியாக அனுப்பிய தகவல்களையும் பரிசோதித்து வருகிறோம். விசாரணைக்கு தடங்கல் ஏற்படக்கூடாது என்பதால், கிடைத்த தகவல்களை வெளியிட விரும்பவில்லை. மெஹ்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தேவையான தகவல்கள் கிடைத்துள்ளன. விசாரணை முழுமையாக முடிந்த பின்னரே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம். பயங்கரவாதிகள் கைது விஷயத்தில், 180 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். மெஹ்தியை கைது செய்து, ஒன்றரை மாதமே ஆகவில்லை. தேவையான நாட்கள் உள்ளன. இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us