செப்டம்பருக்குள் ரூ.4,000 கோடியை திருப்பி தருவதாக மல்லையா அறிவிப்பு
செப்டம்பருக்குள் ரூ.4,000 கோடியை திருப்பி தருவதாக மல்லையா அறிவிப்பு
UPDATED : ஏப் 01, 2016 05:34 AM
ADDED : மார் 31, 2016 12:18 AM

புதுடில்லி: வங்கிகளில் பெற்ற கடன் தொகையில், 4,000 கோடி ரூபாயை, வரும் செப்டம்பர் மாதத்துக்குள் திருப்பிச் செலுத்துவதாக, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.ஐ., எனும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் பெற்ற, 'கிங்பிஷர்' நிறுவன அதிபர் விஜய் மல்லையா, பிரிட்டனின் லண்டன் நகருக்கு தப்பிச் சென்றார். முன்னதாக, நாட்டை விட்டு வெளியேற அவருக்கு தடை விதிக்கக் கோரியும், அவரது பாஸ்போர்ட்டை முடக்கக் கோரியும், எஸ்.பி.ஐ., தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு,சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கு தொடர்பாக, இரண்டு
வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, விஜய் மல்லையாவுக்கு, 'நோட்டீஸ்' @nextcolumn@ அனுப்ப,
சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.@Image@ இந்த வழக்கு, நீதிபதி குரியன் ஜோசப், நீதிபதி ஆர்.எப்.நாரிமன் அடங்கிய அமர்வு முன் நேற்று, மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் மல்லையா தரப்பில்,'சீல்' வைக்கப்பட்ட கவர் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'எஸ்.பி.ஐ.,
தலைமையிலான கூட்டமைப்பு வங்கிகளிடம் பெற்ற, 6,903 கோடி ரூபாயில், 4,000
கோடி ரூபாயை, வரும் செப்டம்பர் மாதத்துக்குள் திருப்பிச் செலுத்தப்படும்'
என, கூறப்பட்டது. @nextcolumn@ அதில், இந்த தொகையை திருப்பிச் செலுத்துவது சம்பந்தமான திட்டம் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, மல்லையாவின் திட்டம் குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி, வங்கிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை, ஏப்., 7க்கு தள்ளி வைத்தனர்.
