தமிழகத்தில் 73.76 சதவீதம் ஓட்டுப்பதிவு: தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் 73.76 சதவீதம் ஓட்டுப்பதிவு: தேர்தல் ஆணையம்
UPDATED : மே 16, 2016 10:12 PM
ADDED : மே 16, 2016 10:08 PM

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 232 தொகுதிகளில் 73.76 சதவீதம் ஓட்டுப்பதிவு நடைபெற்றதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
இதுதொடர்பாக லக்கானி கூறியதாவது:தமிழகம் முழுவதும் 232 தொகுதிகளில் 73.76 சதவீதம் ஓட்டுப்பதிவு நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 86.50 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 55.27 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.நகர்புறங்களை விட ஊரகப் பகுதிகளில் அதிகபடியான ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் 80 சதவீதம் ஓட்டுப்பதிவு நடைபெற்றுள்ளது. நாளை காலை முழுமையான ஓட்டுப்பதிவு விவரம் வெளியிடப்படும்.பார்லிமென்ட் தேர்தலைவிட ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது.100 சதவீத ஓட்டுப்பதிவு விளம்பரங்களுக்கு 35 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.