sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பொது இடங்களில் புகைத்தால் வழக்கு: தனிப்படை அமைக்க உத்தரவு

/

பொது இடங்களில் புகைத்தால் வழக்கு: தனிப்படை அமைக்க உத்தரவு

பொது இடங்களில் புகைத்தால் வழக்கு: தனிப்படை அமைக்க உத்தரவு

பொது இடங்களில் புகைத்தால் வழக்கு: தனிப்படை அமைக்க உத்தரவு


UPDATED : ஜூன் 15, 2016 05:31 AM

ADDED : ஜூன் 13, 2016 10:38 PM

Google News

UPDATED : ஜூன் 15, 2016 05:31 AM ADDED : ஜூன் 13, 2016 10:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,:பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும், பள்ளிகள் அருகில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொள்ளவும், தனிப்படை அமைக்கும்படி, தமிழக சுகாதார துறை மற்றும் டி.ஜி.பி.,க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

@Image@

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சரத் தாக்கல் செய்த மனு

பொது இடங்களில் புகை பிடிக்க, சட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சினிமா, மருத்துவமனை, ஓட்டல், பூங்கா, நுாலகம், நீதிமன்றம் என, பொது இடங்களாக வரையறுக்கப்பட்ட பகுதிகளில், புகை பிடிக்க தடை உள்ளது. பள்ளி, கல்லுாரிகள் அருகில், புகையிலை பொருட்களை விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் புகை பிடித்தால், அவர்களுக்கு அபராதம் விதிக்க, சட்டத்தில் இடம் உள்ளது.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். என் மனு மீது நடவடிக்கை எடுக்கவும், பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவுபள்ளி மாணவர்கள், புகையிலை பயன்படுத்துவது அதிர்ச்சியளிக்க கூடியதாக உள்ளது. கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள இடத்தில் இருந்து, 3௦௦ அடிக்குள், புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருந்தும், விதிமுறைகளை மீறி, பள்ளி மாணவர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில், புகையிலை பொருட்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. கண்டிப்பான சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும், அதை அமல்படுத்துவதில்லை.

தற்போது, கோடை விடுமுறை

@nextcolumn@ முடிந்து பள்ளிகள் திறந்துள்ள நிலையில், சரியான நேரத்தில் இந்த வழக்கும் வந்துள்ளது. பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீதும், பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பவர்கள் மீதும்

நடவடிக்கை கோரி, இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.புகையிலையால் உடல் நலத்துக்கு ஏற்படும் தீமைகள் பற்றி, ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, 'சிகரெட் மற்றும்புகையிலை பொருட்கள் குறித்த விளம்பரத்துக்கு தடை மற்றும் வர்த்தக ஒழுங்குமுறை, தயாரிப்பு, வினியோக சட்டம் -கோபா' 2௦௦3ல், கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டப்படி, பொது இடங்களில், புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு, புகையிலை பொருட்கள் மற்றும் சிகரெட் விற்கவும், தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு, தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 22 முக்கிய பள்ளிகளை தேர்ந்தெடுத்து அரசு சாரா அமைப்பு, ஆய்வு மேற்கொண்டது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அதை சுற்றியுள்ள கடைகளில், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

விதிமீறல்கள்


* அனைத்து பள்ளிகள் அருகில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகின்றன.

* 88.9 சதவீத கடைகளில் 'புகை பிடிக்க கூடாது: புகை பிடிப்பது குற்றம்' என்ற போர்டு வைக்கப்படவில்லை.

* 98.8 சதவீத கடைகளில், '18 வயதுக்கு குறைவானவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பது தண்டனைக்குரிய குற்றம்' என்ற படங்களுடன் கூடிய எச்சரிக்கை போர்டு வைக்கப்படவில்லை.

* 84 சதவீத கடைகளில், பொது மக்கள் புகை பிடிக்கின்றனர்.

* 87.7 சதவீத கடைகளில், பற்ற வைப்பதற்கான சாதனங்கள் இருந்தன.

* 67.5 சதவீதகடைகளில், அணைக்கப்பட்ட சிகரெட் துண்டுகள் கிடந்தன.

* மாணவர்கள் எளிதில் வாங்கும் வகையில், ௮௭.௭ சதவீத கடைகளில் சிகரெட் விற்கப்படுகிறது.

* 56 சதவீத கடைகளில், சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள், பார்வைக்கு தெரியும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.இரண்டு பல் மருத்துவ

கல்லுாரிகளை @nextcolumn@ சேர்ந்த, மூவர் நடத்திய ஆய்வில், பள்ளி மாணவர்கள், 1,255 பேர் பங்கேற்றனர். அதில், 41,1 சதவீத மாணவர்கள், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதும், ஆண்கள், 46.3 சதவீதமும், பெண்கள் 31.6 சதவீதமும் உள்ளதாக கூறப்

பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளை விட, மாநகராட்சி பள்ளிகளில் அதிகம் பேர், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

பொது இடங்களில் புகை பிடிக்க, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. புகை பிடித்தல், புகையிலை பயன்படுத்துவதில் இருந்து, பொது மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது. எனவே, அவசரகால நடவடிக்கையாக, தனி படையை உடனடியாக அமைக்க, சுகாதார துறை மற்றும் டி.ஜி.பி.,க்கு உத்தரவிடப்படுகிறது.

* பள்ளிகள் அருகில் 300 அடியில் அமைந்துள்ள கடைகளில், திடீர் சோதனை மேற்கொள்ள வேண்டும்

* புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும்

* 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை விற்பவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

* பள்ளிகளின் அருகில் வைக்கப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் தொடர்பான விளம்பரங்களை அகற்ற வேண்டும்

* பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது, வழக்கு பதிவு செய்ய வேண்டும்* ஜூன், 20- ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.விசாரணை வரும் ௨௦ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

மாநகராட்சி, சுகாதார துறை, டி.ஜி.பி., சென்னை போலீஸ் ஆணையர், பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us