
2010 மே 16
அனுராதா ரமணன், தஞ்சாவூரில், 1947 ஜூன் 29ல், பிறந்தார். ஓவியக் கலைஞராக பணியை துவங்கிய அவர், 1977ல், 'மங்கை' இதழ் மூலம், பிரபல எழுத்தாளரானார். 30 ஆண்டுகளில், 800 புதினங்களும், 1,230 சிறுகதைகளும் எழுதியுள்ளார்.
கூட்டுப் புழுக்கள், மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய புதினங்கள், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டன. அவற்றுள், கே.பாலசந்தர் இயக்கிய, ஒரு வீடு இரு வாசல் திரைப்படம், பிற சமூக சிக்கல்கள் மீதான சிறந்த
திரைப்படத்திற்கான தேசிய விருதை, 1991ல் பெற்றது.இவரது கதையை மையமாக வைத்து, 1988ல் வெளியான, ஒக்க பாரிய கதா என்ற தெலுங்கு திரைப்படம், ஐந்து நந்தி விருதுகளை வென்றது. இவரது பல கதைகள், 'டிவி' சீரியல்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன. இவரது, படைப்பாற்றலை பாராட்டி, முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்.,
தங்கப்பதக்கம் வழங்கியுள்ளார். அனுராதா ரமணன், 2010, மே 16ல் காலமானார். அவர் இறந்த தினம், இன்று.