உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஆக 24, 2017 12:46 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும், பழனிசாமி - பன்னீர் அணிகள் இணைந்தன.
தமிழக, அ.தி.மு.க.,வில், இரு அணிகளாக செயல்பட்டு வந்த முதல்வர் பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர், நேற்று முன்தினம் இணைந்தனர்.
தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியில் முன்னாள், எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் தலைமையில் செயல்பட்டு வந்த பன்னீர் அணியும், கட்சியின் மாநில செயலர் புருஷோத்தமன் தலைமையில் செயல்பட்டு வந்த பழனிசாமி அணியும், நெல்லித்தோப்பு கட்சி அலுவலகத்தில், நேற்று இணைந்தன.
