தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கமலை விமர்சிக்க தயாராகிறது தி.மு.க.,

கமலை விமர்சிக்க தயாராகிறது தி.மு.க.,

கமலை விமர்சிக்க தயாராகிறது தி.மு.க.,


ADDED : அக் 04, 2017 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2017 05:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அரசியல் ரீதியாக, நடிகர் கமலை விமர்சிக்க வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினிடம், அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து, தி.மு.க.,வினர் கூறியதாவது: தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, தனிக்கட்சி துவங்க, கமல் விரும்புகிறார். இதனால், ஊழல், மதவாதம் ஆகிய இரண்டையும் எதிர்க்கும் சக்தியை, தேசிய அளவில் உருவாக்கவும், கமல் ஆலோசிக்கிறார். கமல், கட்சி துவக்கிய பின், தி.மு.க.,வுடன் இணைந்து செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு, தி.மு.க.,வினரிடம் இருந்தது. அதனால், கமலின் கருத்துக்களை, ஸ்டாலின் விமர்சிக்கவில்லை.

ஆனால், 'தமிழக முதல்வராகும் முயற்சியில், நான் ஈடுபடுவேன். 30 ஆண்டுகளாக, நற்பணிகளை செய்கிறேன். மக்களின் நன்மைக்காக, பா.ஜ.,வுடன் சேர்ந்து பணியாற்றுவதில் தவறில்லை' என, கமல் தெரிவித்து உள்ளார். எனவே, ஸ்டாலின் முதல்வராவதை, கமல் விரும்பமாட்டார். அரசியலில் அவர் வளருவதை, தடுத்தாக வேண்டும் என, ஸ்டாலினிடம், மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கமலின் முதல்வர் கனவை, ஆளுங்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். அதற்கு, அவரும் பதிலடி கொடுத்தார். அதே போல், 'கமலின் கருத்துக்களுக்கு, அரசியல் ரீதியாக பதிலளித்து, அவருக்கு பின்னடைவு ஏற்படுத்த வேண்டும்' என, ஸ்டாலினிடம், மாநில நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us