தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/நவம்பர் 7 ல் முக்கிய அறிவிப்பு இல்லை: கமல்

நவம்பர் 7 ல் முக்கிய அறிவிப்பு இல்லை: கமல்

நவம்பர் 7 ல் முக்கிய அறிவிப்பு இல்லை: கமல்


UPDATED : அக் 27, 2017 09:40 AM

ADDED : அக் 26, 2017 09:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2017 09:40 AM ADDED : அக் 26, 2017 09:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை : நடிகர் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் எப்போது என்பது குறித்த கேள்வி பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. ஆனால் தான் டுவிட்டர் மூலம் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டதாக கமல் சமீபத்தில் கூறி இருந்தார். இந்நிலையில் தனது பிறந்தநாளான நவம்பர் 7 அன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, நவம்பர் 7 ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளேன். நம் இயக்கத்தார் என்னுடனும், மக்களுடனும் தொடர்பு கொள்ள வசதியாக ஏற்பாடுகள் நடக்கின்றன. தமிழகத்திற்கு கடமையாற்ற நினைப்பவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். தியாகமாக நினைத்து முன்வருபவர்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள். அவர்கள் என்னை கடன்பட செய்வார்கள்.

இளைஞர்களை ஒருங்கிணைக்க வேண்டிய கடமையும் தேவையும் எனக்கு வந்து விட்டது. நமது இயக்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோருடன் சேர்ந்து தமிழகத்துக்கு பலம் சேர்ப்போம். இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

கட்சி அறிவிப்பு இல்லை

இயக்கம் என நடிகர் கமல் கூறி உள்ளதால் நவம்பர் 7 ல் தனிக்கட்சி துவங்குவது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட வாய்ப்பு உள்ளதாக பேசப்பட்டது.

ஆனால் அவ்வாறு முக்கிய கட்சி அறிவிப்பு ஏதும் இல்லை என மறுத்துள்ளார்.இது தொடர்பாக இன்று மதியம் பதவிட்டுள்ள டுவிட்டரில் ; ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர்7 இயக்கத்தார் கூடுவது எம் பலவருட வழக்கம்.பொது அறிவுப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us