
1982 நவம்பர் 11
வில்லன் நடிகர், எஸ்.ஏ.அசோகன், திருச்சியில், 1931 மே 20 ல் பிறந்தார்.
சிறுவயது முதலே, மேடை நாடகங்களில் பங்கேற்பதிலும், பேச்சு, கட்டுரை போட்டிகளில் பங்கேற்பதிலும் ஆர்வம் காட்டினார். திருச்சி புனித சூசையப்பர் கல்லுாரியில், இளம்கலை பட்டப்படிப்பை முடித்தார். இவரை, சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர், இயக்குனர், டி.ஆர்.ராமண்ணா.அவ்வையார் என்ற படத்தில் அறிமுகமானார். 1961ல் வெளியான, கப்பலோட்டிய தமிழன் படம் மூலம் பிரபலமானார். 1960 மற்றும், 1970களில் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தார். குணசித்திர வேடங்களிலும் நடித்தவர்.படங்களில் அவரது குரல் தொனியும், வசனங்களை அவர் உச்சரித்த பாணியும் நல்ல பெயரை பெற்று தந்தது. உலகம் சுற்றும் வாலிபன், அன்பே வா, வல்லவனுக்கு வல்லவன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர். 1982 நவ., 11ல் காலமானார். அவர் இறந்த தினம் இன்று.