உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 06, 2018 06:58 PM

அ நிறம் | அளவு
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகமாக அறிவிக்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி துவங்கியுள்ள கமல்ஹாசன், சென்னை ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள அவரது வீட்டையே கட்சியின் தலைமை அலுவலகமாக மாற்ற முடிவு செய்துள்ளார். தற்போது முக்கிய பிரமுகர்கள், கட்சியினர் உட்பட அனைவரையும் அந்த வீட்டில் வைத்தே சந்தித்து வருகிறார். இதற்கான அறிவிப்பை நாளை அவர் வெளியிடவுள்ளதாகவும், அப்போது கட்சியின் கொடியை அலுவலக வாசலில் ஏற்றவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
