உள்ளடக்கத்திற்கு செல்ல

ஸ்டாலின் உள்ளிட்ட 75 திமுக எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்கு
ஸ்டாலின் உள்ளிட்ட 75 திமுக எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்கு
ADDED : மார் 21, 2018 08:33 AM

அ நிறம் | அளவு
சென்னை : விஷ்ய இந்து பரிஷித் நடத்தும் ரத யாத்திரையை தமிழகத்தில் அனுமதித்ததை எதிர்த்து, திமுக சார்பில் தலைமை செயலகம் அருகே நேற்று சாலை மறியல் நடைபெற்றது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 75 திமுக எம்.எல்.ஏ.,க்கள் மீது கோட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி ஒன்று கூடுதல், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
