ADDED : ஜன 28, 2019 11:38 PM
சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கு, அதிகபட்சமாக, ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல், சம்பளம் வழங்குவதாக அரசு தெரிவித்துஉள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இணைந்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
'நிதி பற்றாக்குறை உள்ளதால், ஜாக்டோ - ஜியோவின் கோரிக்கைகளை ஏற்க முடியாத நிலை உள்ளது' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான சம்பள பட்டியலை, பொதுமக்கள் அறியும் வகையில், அரசு வெளியிட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு அதிக பட்சமாக, 1.03 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்குவதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர்கள் சம்பளம் (ரூபாயில்)பதவி/பணியில் சேர்ந்தவுடன்/சராசரி சம்பளம்இடைநிலை ஆசிரியர்/24,720/35,400பட்டதாரி ஆசிரியர்/43,680/66,120முதுநிலை ஆசிரியர்/44,280/66,840தொடக்க பள்ளி ஹெச்.எம்.,/43,440/65,880நடுநிலை பள்ளி ஹெச்.எம்.,/44,040/66,600உயர்நிலை பள்ளி ஹெச்.எம்.,/44,280/66,840மேல்நிலை பள்ளி ஹெச்.எம்.,/68,280/1,03,320அரசு ஊழியர் ஊதியம் (ரூபாயில்)பதவி/பணியில் சேர்ந்தவுடன்/சராசரி சம்பளம்அலுவலக உதவியாளர்/18,840/28,560டிரைவர்/23,400/35,400இளநிலை உதவியாளர்/23,400/35,400உதவியாளர்/24,720/37,440கண்காணிப்பாளர்/44,280/66,840**
