தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/'யாராவது குடிக்க வந்தால்... ஒரே குத்து!' 'டாஸ்மாக்' முன் கத்தியுடன் இளம்பெண் போராட்டம்

'யாராவது குடிக்க வந்தால்... ஒரே குத்து!' 'டாஸ்மாக்' முன் கத்தியுடன் இளம்பெண் போராட்டம்

'யாராவது குடிக்க வந்தால்... ஒரே குத்து!' 'டாஸ்மாக்' முன் கத்தியுடன் இளம்பெண் போராட்டம்


UPDATED : பிப் 28, 2019 12:22 PM

ADDED : பிப் 27, 2019 11:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 28, 2019 12:22 PM ADDED : பிப் 27, 2019 11:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூரில், சட்டவிரோதமாக, 24 மணி நேரமும் நடக்கும் மது விற்பனைக்கு எதிராக, கையில் கத்தியுடன், 'டாஸ்மாக்' முன், ஒற்றை ஆளாக போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணால், பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில், பல இடங்களில், 24 மணி நேர மது விற்பனை நடக்கிறது.எந்நேரமும் திறந்திருக்கும் பார்களில், அதிகாலையே, கூட்டம் நிரம்பி வழிகிறது. பல குடும்பங்களில், பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்பட்டு, அன்றாடம் சண்டை, சச்சரவு என, பெண்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

அதிர்ச்சி

இதனால், பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர், 'பொறுத்தது போதும்... பொங்கி எழு' பாணியில், கையில் கத்தியுடன், நேற்று நடத்திய போராட்டம், போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.திருப்பூர், பாண்டியன் நகரில் உள்ள மதுக்கடையை ஒட்டி அமைந்துள்ள, 'பாரில்' 24 மணி நேர மது விற்பனையை கண்டித்து, அப்பகுதியைச் சேர்ந்த கவிதா, 22, கையில் இரண்டு கத்திகளுடன், நேற்று, பார் முன் அமர்ந்து கொண்டார்.பறிமுதல்'யாரும் குடிக்க செல்லாதீர்கள்; மீறி, யாராவது போனால் குத்திவிடுவேன் அல்லது நானே, குத்திக்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்வேன்' என, கூச்சலிட்டார்.

இதையடுத்து, அந்த பாருக்கு சென்ற திருமுருகன்பூண்டி போலீசார், பாரில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நுாற்றுக்கணக்கான மது பாட்டில்களை பறிமுதல் செய்து, போராட்டம் நடத்திய பெண்ணையும் விசாரணைக்கு அழைத்து சென்று, பின் விடுவித்தனர்.

கவிதா கூறியதாவது:எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மதியம், 12:00 மணிக்கு தான் மதுக்கடையை திறக்க வேண்டும். ஆனால், இங்குள்ள பாரில், 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது.என் கணவர் காலையிலேயே குடித்து, வீட்டிலேயே படுத்து கொள்கிறார். வருமானமின்றி, குழந்தைகளை வளர்க்க முடியவில்லை. போலீசிடம் பலமுறை சொல்லியும் கண்டுகொள்ளவில்லை. என்னைப் போலவே பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். கலெக்டர் உடனடியாக தலையிட்டு, 24 மணி நேர மது விற்பனையை தடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

'மாமூல்' அதிகாரிகள்

திருப்பூரில், மதுக்கடை பார்கள் அனைத்தையும், ஆளுங்கட்சியினர் தான் நடத்துகின்றனர். 'டாஸ்மாக்' அதிகாரிகள், போலீசாருக்கு, மாதம் தவறாமல், 'மாமூல்' சென்று விடுகிறது. 'குடி'மகன்களின் குடும்பங்கள் பாழாவதைப் பற்றி இவர்களுக்கு எள்ளளவும் அக்கறை கிடையாது.கவிதா போன்று, ஒவ்வொரு குடும்பத்திலும், பாதிக்கப்பட்ட பெண்கள் கிளம்பி, சட்டவிரோத, 'பார்'கள் முன் திரண்டால், சட்டம் - ஒழுங்கு பாதிக்கும் அபாயம் உள்ளது. அதற்கு முன், ஊழல் அதிகாரிகள் உஷார் ஆவது நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us