தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/காங்.,கில் வளரும் வாரிசு அரசியல்

காங்.,கில் வளரும் வாரிசு அரசியல்

காங்.,கில் வளரும் வாரிசு அரசியல்


UPDATED : மார் 05, 2019 03:42 PM

ADDED : மார் 05, 2019 03:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 05, 2019 03:42 PM ADDED : மார் 05, 2019 03:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: ‛‛வாரிசுகளுக்கு கட்சிப் பதவியும் தேர்தலில் சீட்டும் இல்லை'' என காங்., தலைவர் ராகுல், திரும்ப திரும்ப ‛கிளிப்பிள்ளை' போல கூறினாலும், மூத்த தலைவர்களை அவரால் அடக்க முடியவில்லை.Image 2227002

கமல்நாத்

வாரிசுக்கு இடம் கேட்கும் பட்டியலில் முந்திக்கொண்டு நிற்பது கமல்நாத் தான். ஏற்கனவே ம.பி., முதல்வராக இருக்கும் இவர், மகன் நகுல் நாத்துக்கு சிந்த்வாரா லோக்சபா தொகுதியில் போட்டியிட இடம் கேட்கிறார். அதுவும் சாதாரணமாக கேட்கவில்லை. ‛‛கொடுத்தே ஆக வேண்டும்'' என்று கறாராக கூறிவிட்டார்.இவர் சொன்ன பிறகு மறுக்க முடியுமா? நகுல் நாத்தின் பெயரை கேள்வியே கேட்காமல் ஒப்புக்கொண்டது ம.பி., மாநில கட்சி. ராகுலிடம் கூட ஒரு வார்த்தை சொல்லவில்லையாம்.

என்ன செய்கிறார் நகுல்நாத்?

நகுல்நாத் ஒரு வர்த்தகர். தந்தையின் செல்வாக்கு தான் அரசியலில் இவருக்கு உதவ வேண்டும். மாநில அரசியலில் இவரை பலருக்கும் தெரியாது. ஆனால், சிந்த்வாரா தொகுதியில் இவரை கட்சியினருக்கு ஓரளவுக்கு தெரியும். ஏனெனில், இங்கு தான் கமல்நாத் 1980 முதல் போட்டியிட்டு வருகிறார். ஹவாலா டைரி வழக்கு விசாரணையின் போது, கமல் நாத் போட்டியிட சீட் தரப்படவில்லை. எனவே 1996 தேர்தலில் கமல்நாத்தின் மனைவி அல்கா நாத் காங்., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 6 மாதங்களுக்குப் பிறகு, கணவருக்காக எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். அந்த இடத்தில் போட்டியிட்ட கமல்நாத், எதிர்த்து போட்டியிட்ட ம.பி., முன்னாள் முதல்வரும் பா.ஜ., வேட்பாளருமான சுந்தர்லால் பத்வாவிடம் தோல்வி அடைந்தார். 1998 தேர்தலில் கமல்நாத் மீண்டும் வெற்றி பெற்றார். அப்போது அந்த தொகுதியில் நகுல் நாத் தான் தந்தையின் பிரசாரங்களை பார்த்துக்கொண்டார்.Image 675867மகனுக்கு சீட் பெற்ற பிறகு சிந்த்வாரா சட்டசபை தொகுதியில் கமல்நாத் போட்டியிட உள்ளார். கமல்நாத்துக்காக அவரது விசுவாசி தீபக் சாக்சேனா ராஜினாமா செய்து, இடத்தை காலி செய்து கொடுத்தார்.

கமல் நாத்தைப் போல இன்னும் சில மூத்த தலைவர்கள், காங்., சீட்டுகளைப் பெற மும்முரமாக இயங்கி வருகின்றனர். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங்கின் மகன் அஜய்சிங், அம்மாநில கட்சியின் முன்னாள் தலைவர் அருண் யாதவ், முன்னாள் அமைச்சர் ராம் நிவாஸ் ராவத், தற்போதைய எம்.பி., கந்திலால் ஆகியோருக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டது அம்மாநில காங்., கமிட்டி. இதில், அஜய்சிங், அருண் யாதவ், ராம் நிவாஸ் ராவத் ஆகியோர் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us