தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பொதுச்செயலாளர் எடப்பாடி?: போஸ்டரால் பரபரப்பு

பொதுச்செயலாளர் எடப்பாடி?: போஸ்டரால் பரபரப்பு

பொதுச்செயலாளர் எடப்பாடி?: போஸ்டரால் பரபரப்பு


UPDATED : ஜூன் 12, 2019 12:53 PM

ADDED : ஜூன் 12, 2019 10:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 12, 2019 12:53 PM ADDED : ஜூன் 12, 2019 10:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை : அதிமுக நிர்வாகிகள், எம்எல்ஏ.,க்கள், எம்.பி.,க்கள் ஆலோசனை கூட்டம் இன்று (ஜூன் 12) நடைபெறும் நிலையில், பொதுச் செயலாளர் எடப்பாடியார் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அதிமுக.,வில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Image 2296505

அதிமுக.,விற்கு ஒற்றை தலைமை தேவை என வலியுறுத்தி எம்எல்ஏ., ராஜன் செல்லப்பா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். இதனையடுத்து ஜூன் 12 அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் கட்சியினர் யாரும் பொது வெளியில் கருத்து தெரிவிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

ஒற்றை தலைமை குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Image 697048

அந்த போஸ்டரில், 'பொதுச் செயலாளராக பதவியேற்க வரும் எடப்பாடியாரே வருக' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இது அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் எதிரில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

Image 697063இதேபோல், சிவகங்கை மாவட்டத்தில், அமைச்சர் செங்கோட்டையனை பொது செயலாளராக நியமிக்க வேண்டும் என போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us