sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெண்களும் நீர் மேலாண்மையும்...

/

பெண்களும் நீர் மேலாண்மையும்...

பெண்களும் நீர் மேலாண்மையும்...

பெண்களும் நீர் மேலாண்மையும்...


ADDED : ஜூலை 30, 2019 02:06 AM

Google News

ADDED : ஜூலை 30, 2019 02:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'நீரின்றி அமையாது உலகு' என்ற அவ்வையின் வரிகளால் நீரின் முக்கியத்துவம் கூறி தமிழ் மொழி பெருமை கொள்கிறது. இறைவனால் படைக்கப்பட்ட உலகம் 75 சதவீதம் நீராலும், 25 சதவீதம் நிலத்தாலும் உருவாக்கப்பட்டுள்ளது. நான்கில் மூன்று பங்கை நீராகக் கொண்ட பூமியில் நீர்ப்பற்றாக்குறை ஏன் ஏற்படுகிறது?

மொத்த நிலப்பரப்பில் 96.5 சதவீதம் நீர் கடல் நீர். இக்கடின நீரால் மனிதனின் தாகம் தீர்க்கவோ, விவசாயம் செய்யவோ, விலங்குகள், பறவை என யாருக்குமே பயனில்லை. மீதம் உள்ள 3.5 சதவீதம் நீர் மட்டுமே குடிநீருக்கும், வேளாண்மைக்கும் பயன்படுகிறது. ஏன் பற்றாக்குறைமுறையான நீர் மேலாண்மை இல்லாமையால் நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. கடல் நீர் ஆவியாகி மீண்டும் மழை நீராக பூமிக்கே தந்து விடுகிறது. பெய்கின்ற மழை நீரை குளம், குட்டைகள், ஏரிகள், கண்மாய்கள் என்ற நீர்நிலைகளில் சேமிக்கத் தெரியாமல் பயனற்று கடலுக்கே சென்று விடுகிறது. இயற்கையை பாழ்படுத்தம் மனிதர்களால் பருவமழையும் பொய்த்து நீர்ப்பற்றாக்குறை ஏற்படுகிறது.இந்தியாவில் 222 மாவட்டங்களில் நிலத்தடி நீரும் இல்லாமல் மக்கள் அவதியுறுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2030ம் ஆண்டில் 21 நகரங்களில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என வல்லுனர்கள் கூறியிருக்கிறார்கள். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் வரும் காலங்களில் நீர்ப்பற்றாக்குறையை சமாளிக்க முடியும். ஒவ்வொரு தனிமனிதனும் சொட்டுத் தண்ணீரை கூட வீணாக்காமல் வரும் தலைமுறைக்கு சேமித்து வைப்பதே நாம் அவர்களுக்கு சேர்ந்து வைக்கும் பெரும் செல்வம்.இதைதான் ஒரு கவிஞர், 'என் தந்தை தண்ணீரை ஏரியில் பார்த்தார். நானோ பாட்டிலில் பார்க்கிறேன். என் மகனோ ஆய்வகத்தில் பார்ப்பான்' என்று எழுதுகிறார். அவ்வை வரிகளோ 'வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோன் (அரசன்) உயர்வான்' என்று நாட்டின் மகிழ்ச்சியே நீரில் தான் உள்ளது' என்கிறது. வீடுகளில் நீர் மேலாண்மை'மனைக்கு விளக்கு மடவார்'. இல்லறத்தை நல்லறமாக நுண்ணறிவு மிக்க நிர்வாகியாக வழிநடத்துபவர்கள் பெண்கள் தான். இதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களிலேயே காணப்படுகிறது.

சிறு சிறு துளியாக பணத்தை சேமித்து நெருக்கடியான நேரங்களில் உதவும் பெண்கள் போற்றுதலுக்குரியவர்கள். வீடுகளில் நீரை பயன்படுத்துவதில் பெண்களின் பங்கே அதிகம். தண்ணீரை அதிகமாக செலவு செய்யும் வீடுகளில் பணத்தை சேமிக்க முடியாது. இதைத்தான் 'பணத்தை தண்ணீராக செலவு செய்யாதே!' என்கின்றனர்.

இன்றைய சூழலில் பணத்தை செலவு செய்தாலும் குடிநீர் தர ஆட்கள் இல்லை. கையில் பணத்தை வைத்துக்கொண்டு ஒரு குடத்திற்காக வரிசையில் நிற்கும் அவலத்தையும் பார்த்துவிட்டோம்.சமையலறை என்பது பெண்களின் கட்டுப்பாட்டில் இருக்க கூடியது. ஒரு நாளில் அதிக நேரத்தை சமையலறையிலேயே செலவிழிக்க கூடிய குடும்ப தலைவிகளும் உண்டு.வீணாகும் தண்ணீர்ஒவ்வொரு வேளை உணவு தயாரிக்கும் போதும் தண்ணீர் தேவை ஏற்படுகிறது. அரிசி, பருப்பு, தானியங்கள் காய்கறிகளை சுத்தப்படுத்தி அந்த தண்ணீரை வீணாக்காமல் வீட்டுத் தோட்டத்திற்கு பயன்படுத்தலாம்.இன்றைய சூழலில் பாத்திரங்களை சுத்தப்படுத்த பெண்கள் அதிக நீரை வீணாக்குகிறார்கள். பெரும்பாலான வீடுகளில் சமையலறைகளில் குழாய் மூலம் தண்ணீர் பெறப்படுகிறது. குழாயை திறந்தவுடன் பாத்திரங்களில் படும் நீரை விட வீணாவது தான் அதிகம்.அக்காலங்களில் பெரிய பாத்திரங்களில் நீரைப் பிடித்து வைத்துக்கொண்டு புளி, வண்டல் மண், செங்கல் பொடி போன்றவற்றால் விளக்கினார்கள். இப்போது 'டிட்டெர்ஜெண்ட்' சோப்புகள் கொண்டே விளக்குவதால் பாத்திரத்தில் நுரை வந்துகொண்டே இருக்கிறது. அதிகமாக நீர் தேவைப்படுகிறது. அந்நீர் வேதியியல் கரைசலால் மாசுபட்டு இயற்கையையும் கெடுக்கிறது.சமையலறையில் பாத்திரங்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பீங்கான் பொருட்கள், தட்டுகளை தினமும் கழுவுவதை தவிர்த்து துணியால் துடைத்து வைக்கலாம்.

கை கழுவும் இடமான 'வாஷ் பேசினில்' குழாயை திறந்துவிட்டு கை கழுவும் போது நீர் வீணாக்கப்படுகிறது. மேலும் பல் துலக்குதல், 'ஷேவ்' செய்தல் போன்றவற்றை குழாயை குழாயை திறந்துவிட்டு கொண்டே செய்வதால் அளவுக்கதிகமான நீர் வீணாக்கப்படுகிறது. எப்போதும் பாத்திரங்களில் பிடித்து வைத்துக்கொண்டு நமது தேவைகளை பூர்த்தி செய்யும் போது நீர் சேமிக்கப்படுகிறது.இன்றைய சூழலில் வீடு கட்டுவோர், ஒவ்வொரு அறையிலும் குழாய் மூலம் தண்ணீர் பெறும் வசதியை ஏற்படுத்திக் கொள்கின்றனர். 'டேப்' சரியாக மூடாத நிலையில் சொட்டு சொட்டாக விழும் நீர், வினாடிக்கு ஒரு சொட்டு என்றாலும் ஓர் ஆண்டிற்கு 10,200 லிட்., வீணாகிறது என்கிறார்கள். குளியலறையில்'ஷவர்' என்படும் நீர் தெளிக்கும் குளியல் முறை சுகமானது என்றாலும் உடலில் படும் நீரைவிடவும் வீணாக தரையில் விழும் நீர் அதிகம். வாளியில் நீரை பிடித்து குவளையில் முகந்து குளிப்பதே நீரை சேமிக்கும் முறையாகும். துணிகளை துவைப்பதற்கு ஆகும் நீரின் அளவு மூன்றில் இரண்டு மடங்கு அளவு வீணாகிறது. கையால் துவைக்கின்ற காலத்தில் ஆற்றுக்கோ, குளத்திற்கோ எடுத்துச் சென்றனர். இன்றோ கிராமங்களில் கூட 'வாஷிங் மெஷின்' வந்துவிட்டது.

இது அதிக நீரை எடுக்கிறது.அழுத்தும் வகையான 'டேப்'புகள் ஓரளவு தண்ணீரை சேமிக்க உதவும். நிலத்தடி நீர் எடுக்கும் மோட்டார்களை பயன்படுத்தும்போது 10/20 நிமிடங்களிலேயே 1000, 2000 லிட்., நீர் முழு கொள்ளவை எட்டுகின்றன. பெரும்பாலான வீடுகளில் 'ஸ்விட்ச்' யை போட்டு விட்டு வேறு வேலைகளில் மூழ்கி விடுகின்றனர். இதனாலும் நீர் வீணடிக்கப்படுகிறது.முன்பு வீடுகளில் மாட்டுச்சாணம் கலந்து கையால் வாசல் தெளிப்பார்கள். இன்றோ நீண்ட குழாய்களில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கிறார்கள். இதன் மூலம் அதிக நீர் விரயமாகிறது. நாம் செலவிடும் ஒவ்வொரு சொட்டு நீரும் அடுத்தவர்களின் பயன்பாட்டில் கை வைக்கிறோம் என்பதை உணர வேண்டும்.மழை நீரே சுத்தமான நீர் என ஆய்வுகள் கூறியபோதும் அந்நீரை வீடுகளில் சேமிக்க பலர் ஆர்வம் காட்டவில்லை.மொட்டை மாடிகளில் வழியும் நீர் தெருக்களில் விழுந்து சாக்கடையில் சேருகிறது.

மண் தரையின்றி பேவர் பிளாக் கற்களால் நிலத்தடி நீராக மாறாமல் வீணாக சாக்கடையில் கலக்கிறது.இதுபோன்ற விழிப்புணர்வு மூலம், இல்லந்தோறும் இல்லத்தரசிகள் தண்ணீரை சேமிக்க வேண்டும்.

-ச.மாரியப்பன், ஆசிரியர்அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிகம்பம். 94869 44264






      Dinamalar
      Follow us