ADDED : ஆக 10, 2019 01:37 AM
வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஒரு இடத்தை பாதுகாப்பதுடன், வாஸ்து படி ஒரு இடத்திற்கும் மற்றொரு இடத்திற்கும் பிரிவை ஏற்படுத்தி அந்த இடத்தை அதன் தனித்தன்மையுடன் செயல்பட வைக்கிறது.
ஒரு கட்டடம் கட்டும் முன் அதன் காம்பவுண்ட் சுவரின் நான்கு மூலைகளையும் சதுரம், செவ்வகமாக இருக்கும்படி கட்டமைக்க வேண்டும். கட்டப்படும் கட்டடம் அடையாள குறியிட்ட காம்பவுண்ட் மூலையிலிருந்து 90 டிகிரி மூலை மட்டம் வரும்படி கட்டப்பட வேண்டும்.ஒரு இடத்திற்கு நான்கு திசையிலும் கட்டாயம் காம்பவுண்ட் சுவர் அமைக்க வேண்டும். மெயின் மற்றும் காம்பவுண்ட் சுவருக்கு இடையில் உள்ள காலியிடம் தெற்கு, மேற்கு பகுதியை விட வடக்கு, கிழக்கு பகுதியில் அதிகம் இருக்க வேண்டும்.
காம்பவுண்ட் சுவருக்கும் கட்டடத்தின் மெயின் சுவருக்கும் இடையே அமைக்கும் இடைவெளி சமமாக இருக்க வேண்டும். காம்பவுண்ட் சுவரின் எந்த மூலையும் நீளமாகவோ, உடைந்தோ இருக்கக் கூடாது என்கிறார்கள் கட்டுமான வல்லுனர்கள்.