ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம்
ஓரின சேர்க்கையாளர் திருமணம் நிராகரித்தது உயர் நீதிமன்றம்
UPDATED : ஏப் 15, 2022 12:53 AM
ADDED : ஏப் 15, 2022 12:51 AM
அலகாபாத்- தங்கள் திருமணத்தை அங்கீகரிக்க கோரி இரு பெண்கள் தாக்கல் செய்த மனுவை, அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
![]() |
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மகளை காணவில்லைஇங்கு, அஞ்சு தேவி என்ற பெண், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 23 வயதான தன் மகளை காணவில்லை என்றும், அவரை, 22 வயதான பெண் ஒருவர் சிறைபிடித்து தன் 'கஸ்டடி'யில் வைத்துள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இரண்டு பெண்களையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது. அவர்கள் 7ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, 'நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். ஓரின சேர்க்கையாளர்கள் சேர்ந்து வாழ்வதை சட்டம் ஆதரிக்கிறது. 'எனவே எங்கள் திருமணத்தை நீதிமன்றம் அங்கீகரிக்க வேண்டும்' என, இரு பெண்களும் தெரிவித்தனர்.
![]() |