உஷ்...... ரகசியம்! பாலிவுட் படத்தில் பியா பாஜ்பாய்
உஷ்...... ரகசியம்! பாலிவுட் படத்தில் பியா பாஜ்பாய்
ADDED : செப் 17, 2011 10:38 PM

கோவா, கோ ஆகிய படங்களில் துறுதுறு பெண்ணாக நடித்த நடிகை பியா பாஜ்பாய் காதும் காதும் வைத்த மாதிரி பாலிவுட் படம் ஒன்றில் நடித்துக்கொண்டிருக்கிறாரம். கமுக்கமாக இருக்கும் அம்மணியை கேட்டால், ஆமாம் நான் பாலிவுட் படத்தில் நடிக்கிறேன். ஆனால் அது பற்றி மேலும் தகவல்கள் ஏதும் இப்போதைக்கு கூறி முடியாது என சஸ்பென்ஸ் வைத்தார்.
மேலும் விசாரிக்க, பாலிவுட்டின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் அந்தப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறாராம். அந்தக் கேரட்கடருக்கு ஒரு பொருத்தமான நடிகையை தேடிக் கொண்டிருந்த அந்த நிறுவனம், தனது போட்டோக்களையும், வீடியோக்களையும் பார்த்து இம்பிரசாகி உடனடியாக புக் செய்துவிட்டதாக பெருமையுடன் கூறுகிறார் பியா.
தமிழ் படங்கள் தனக்கு ஒரு நல்ல அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என நன்றியை கூறினாலும், தனது தாய் மொழியாம் இந்தியில் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக விரும்பியதாக புன்னகையுடன் தெரிவித்துள்ளார் பியா.


