மரக்காணம் கொலை சம்பவம் ; சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணை
மரக்காணம் கொலை சம்பவம் ; சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணை
ADDED : மே 13, 2013 05:07 AM
மரக்காணம் : மரக்காணத்தில் நடந்த வன்முறையின் போது நடந்த கொலை தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த, 25ம் தேதி, மரக்காணத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில், அரியலூர் மாவட்டம் வெண்ஞான் கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இச்சம்பவத்தில், முதலில் வாகன விபத்தில் செல்வராஜ் காயமடைந்ததாக வழக்குப் பதிந்த போலீசார், பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின், கொலை வழக்காக பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கபட்டது.
இதையடுத்து, சென்னையில் இருந்து, சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான, போலீஸ் குழுவினர், நேற்று நேரில் வந்து செல்வராஜின் மரணம் குறித்து விசாரித்தனர்.