தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/காஷ்மீர் இளைஞர்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்க வேண்டும்: முதல்வர் நரேந்திர மோடி பேச்சு

காஷ்மீர் இளைஞர்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்க வேண்டும்: முதல்வர் நரேந்திர மோடி பேச்சு

காஷ்மீர் இளைஞர்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்க வேண்டும்: முதல்வர் நரேந்திர மோடி பேச்சு


ADDED : ஜூன் 24, 2013 02:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2013 02:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சண்டிகார்:''காஷ்மீர் இளைஞர்கள், நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்க ஆர்வமாக உள்ளனர். அவர்கள் மனதில் உள்ள காயங்களை ஆற்றி, அவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்க வேண்டும்,'' என, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி பேசினார்.

கட்சியில் சலசலப்பு

பா.ஜ., தேர்தல் பிரசார குழு தலைவராக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், கட்சிக்குள் சல சலப்பு ஏற்பட்டாலும், நரேந்தி மோடி, தனக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பை நிறைவேற்றுவதில், ஆர்வம் காட்டி வருகிறார்.

ஜன சங்கத்தின் நிறுவனரான, ஷியாம பிரசாத் முகர்ஜியின், 60வது நினைவு தினத்தையொட்டி, பஞ்சாப் மாநிலம், பதன்கோட்டில் நடந்த, பா.ஜ., பொதுக் கூட்டத்தில், நரேந்திர மோடி பேசியதாவது:

வாஜ்பாய், பிரதமராக இருந்தபோது, நாட்டுக்காக பல நல்ல திட்டங்களை நிறைவேற்றினார். உடல் நலக் குறைவு காரணமாக, அவரால், தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. பா.ஜ., மத்தியில், மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வாஜ்பாய் விட்டுச் சென்ற பணிகள், முழு வீச்சில் நிறைவேற்றப்படும்.

காஷ்மீர் விவகாரத்தில், காங்., தலைமையிலான, மத்திய அரசின் செயல்பாடும், கொள்கையும், தோல்வி அடைந்து விட்டன. காஷ்மீர் மக்களின் மனதில் இடம் பெற வேண்டும் என, வாஜ்பாய் விரும்பினார்.

கடந்த, 2004ல் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று, வாஜ்பாய் மீண்டும் பிரதமராகி இருந்தால், காஷ்மீர் பிரச்னைக்கு, சுமுக தீர்வு கண்டிருப்பார். காஷ்மீர் இளைஞர்கள், நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்ற வேண்டும் என, விரும்புகின்றனர்.

அவர்களை, தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். துப்பாக்கி குண்டுகளால், ரத்தம் தான் சிந்தும்; யாருடைய வாழ்க்கைக்கும், அதனால், பயன் இல்லை. தற்போது, மத்திய அரசுக்கு, மன்மோகன் சிங், சோனியா என, இரண்டு அதிகார மையங்கள் உள்ளன. இதில், எது, உண்மையான அதிகார மையம் என, தெரியவில்லை.

ஜெய்ப்பூரில் விருந்து

பாக்., சிறையில் இருந்த இந்தியர், சரப்ஜித் சிங், அடித்து கொல்லப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? இந்திய ராணுவ வீரர்களின் தலைகளை, பாக்., ராணுவம் துண்டித்தபோது, அந்த நாட்டு பிரதமருக்கு, ஜெய்ப்பூரில் விருந்து கொடுக்கப்பட்டது ஏன்? இதுபோன்ற பல கேள்விகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு, நரேந்திர மோடி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us