தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/காங்கிரஸ் தலைவருடன் விவாதிக்க தயாரா? * மோடிக்கு திக்விஜய் சிங் சவால்

காங்கிரஸ் தலைவருடன் விவாதிக்க தயாரா? * மோடிக்கு திக்விஜய் சிங் சவால்

காங்கிரஸ் தலைவருடன் விவாதிக்க தயாரா? * மோடிக்கு திக்விஜய் சிங் சவால்


ADDED : செப் 23, 2013 02:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2013 02:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:''ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசைக் குறை கூறும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அது தொடர்பாக, யாராவது ஒரு காங்., தலைவருடன் விவாதிக்க தயாரா,'' என, காங்., பொதுச் செயலர் திக்விஜய் சிங், சவால் விடுத்துள்ளார்.

காங்., பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறியுள்ளதாவது:குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, காங்., தலைமையிலான, மத்திய அரசை, கடுமையாக விமர்சித்துள்ளார். பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆட்சியில், அதிகமான வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் அளித்துள்ள புள்ளி விவரங்கள் அனைத்தும் தவறானவை. காங்., தலைமையிலான மத்திய அரசு, அனைத்து துறைகளிலும், தோல்வி அடைந்து விட்டதாக, அவர் கூறியுள்ளார். இது குறித்து, காங்., தலைவர்களில், யாராவது ஒருவருடன், விவாதிக்க, அவர் தயாரா?காங்கிரஸ், நாட்டு மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் கட்சி. ஆனால், மோடி, தனக்கு மட்டுமே, அதிகாரம் கிடைக்க வேண்டும் என, நினைப்பவர். பா.ஜ., ஆட்சி நடக்கும் மாநிலங்களில், ஊழல் நடக்கவில்லை என, அவர் கூறியுள்ளது, ஆச்சர்யம் அளிக்கிறது. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் நடந்த பல ஊழல்கள், 'ஸ்டிங் ஆபரேஷன்' மூலம், வெளிச்சத்துக்கு வந்துள்ளன.இவ்வாறு, திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us