உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : டிச 09, 2013 12:16 AM
அ நிறம் | அளவு
புதுடில்லி: நடந்து முடிந்த, டில்லி சட்டசபை தேர்தலில், 'நோட்டா பொத்தானை மிகக் குறைவான வாக்காளர்களே பயன்படுத்தி உள்ளனர்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து, நடந்து முடிந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் தான், நோட்டா எனப்படும், 'மேலே உள்ள வேட்பாளர்களில் ஒருவருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை என்ற, பொத்தான்கள், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்பட்டு உள்ளன.டில்லி சட்டசபை தேர்தலில், நோட்டா பொத்தான்களுக்கு, வாக்காளர்கள் மத்தியில் அதிக வரவேற்பில்லை. கிழக்கு டில்லியில் மட்டும் அதிகபட்சமாக, 1,338 பேரும், விகாஸ்புரியில், 1,318 பேரும், நோட்டாவை பயன்படுத்தி உள்ளனர்.கிழக்கு டில்லியின், லட்சுமிநகர் தொகுதியில், 129 பேரும், ஓக்லாவில், 251 பேரும் பயன்படுத்தி
உள்ளனர்.
