உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 19, 2014 03:56 AM
அ நிறம் | அளவு
புதுடில்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் (இ.பி.எப்.,) இணைந்துள்ள பென்ஷன்தாரர்களுக்கு, குறைந்தபட்சம், மாதம், 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டம், இன்னும் ஒரு சில நாட்களில் அமல்படுத்தப்பட உள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நிறைவேற்றப்பட்ட அந்த திட்டம், கடந்த மார்ச் 5 முதல், அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறையால், அறிமுகப்படுத்தப்படாமல் இருந்தது. தேர்தல் நடந்து முடிந்துள்ளதால், புதிய திட்டங்களை செயல்படுத்த தடையாக இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. இதனால், புதிய ஓய்வூதிய அறிவிப்பு, இன்னும் ஒரு சில நாட்களில் ?வளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் படி, ஓய்வூதியதாரர்களின் குறைந்த பட்ச பென்ஷன், 1,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
