அடுத்தாண்டு அசாமில் தேர்தல் இந்தாண்டே துவங்கியது சிக்கனம்
அடுத்தாண்டு அசாமில் தேர்தல் இந்தாண்டே துவங்கியது சிக்கனம்
ADDED : அக் 11, 2025 07:38 PM
அசாம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சிக்கன நடவடிக்கையாக, தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலம், குவஹாத்தியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஒவ்வொரு ஆண்டும் நவ., முதல் நாளில், 'பவுண்டேஷன் டே' எனும் அரசு நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.
அதில், அந்த மாநிலத்தில் வாழும் பிற மொழி மக்களின், கலை, கலாசாரத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும். அந்த வகையில், அங்கு செயல்படும் அசாம் தமிழ்ச்சங்கம் சார்பில், அரை மணி நேர கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி பெறப்பட்டிருந்தது.
இதற்காக, கலை பண்பாட்டுத் துறையின் சார்பில், தஞ்சாவூர் கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை நிகழ்த்த, 30 கலைஞர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று, அசாம் மாநில அரசு சார்பில் நடந்த கூட்டத்தில், அடுத்த ஆண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்துவதால் அதிக செலவு ஏற்படும். அதனால், சிக்கன நடவடிக்கையாக இந்த ஆண்டு மட்டும், 'பவுண்டேஷன் டே' உள்ளிட்ட விழாக்களை ரத்து செய்வதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனால், அரசு விழாவில் நடத்த இருந்த நிகழ்ச்சிகளுக்கு பதில், பொங்கல் பண்டிகையின் போது, தமிழர்களின் பாரம்பரிய விழாவாக நடத்தி, தமிழக கலைஞர்களை பங்கேற்க அழைக்க, அசாம் தமிழ்ச்சங்கம் முடிவு செய்துள்ளது.
- நமது நிருபர் -