ADDED : பிப் 05, 2025 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை ராயப்பேட்டையில் யாக்கூப் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ., மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை ராயப்பேட்டை பூரம் பிரகாசம் சாலையைச் சேர்ந்தவர் யாக்கூப், 55. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டில், நேற்று இரவு 9:30 மணியில் இருந்து என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அவரின் வீட்டில் இருந்து கணக்கில் வராத பணம் 50 லட்சம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. வரி ஏய்ப்பு மற்றும் பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இச்சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறினர்.