மஹா.,வில் வாடகை வீட்டில் போதைப் பொருள் தயாரித்த நைஜீரிய பெண் கைது
மஹா.,வில் வாடகை வீட்டில் போதைப் பொருள் தயாரித்த நைஜீரிய பெண் கைது
UPDATED : மே 18, 2025 03:45 AM
ADDED : மே 18, 2025 03:43 AM

பால்கர் : மஹாராஷ்டிராவின் பால்கரில், வீட்டை வாடகைக்கு எடுத்து, போதைப் பொருள் தயாரித்ததாக, நைஜீரியாவைச் சேர்ந்த இளம் பெண் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து, 5.6 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள நலசோப்ரா பிரகதி நகரில், தடை செய்யப்பட்ட போதை பொருளை இளம்பெண் ஒருவர் தயாரித்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் நடத்திய சோதனையில், 'மெபட்ரான்' என்ற போதைப் பொருளை வீட்டிலேயே தயாரித்த, ஆப்ரிக்க நாடான நைஜீரியாவைச் சேர்ந்த ரீட்டா பதி குரேபேவே, 26 என்ற இளம் பெண் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து, 5.6 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
தப்பியோடிய அவருடைய கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.