என்.ஐ.டி., மாணவர்கள் சந்திப்பு: சென்னையில் 'லோகோ' வெளியீடு
என்.ஐ.டி., மாணவர்கள் சந்திப்பு: சென்னையில் 'லோகோ' வெளியீடு
ADDED : டிச 31, 2024 04:11 AM
சென்னை; திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின், உலக முன்னாள் மாணவர் சந்திப்பு-க்கான, 'லோகோ' வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது.
'லோகோ' வெளியிட்டு, அந்நிறுவனத்தின் இயக்குனர் அகிலா கூறியதாவது: திருச்சி என்.ஐ.டி.,யின், 'உலக முன்னாள் மாணவர் சந்திப்பு - 2025' வரும், 4ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. என்.ஐ.டி.,யில் படித்த, 48,000க்கும் மேற்பட்ட மாணவர்களில், 900க்கும் அதிகமானோர், பல்வேறு நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரிகளாக உள்ளனர்; 1,300க்கும் மேற்பட்டோர், பல்வேறு நிறுவனங்களை துவங்கி உள்ளனர்.
இத்தகைய பெருமைமிக்க நிறுவனத்தின், முன்னாள் மாணவர்கள் சந்திப்பில், 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். மாணவர்களை தொழில் முனைவோராக மாற்றுவதில், அதிக கவனம் செலுத்தி வருகிறோம். அந்த வகையில் சந்திப்பின் போது, திருச்சியில், 20 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள, என்.ஐ.டி., ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையத்தை திறக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.