sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போட்டியும் இல்லை; ஆதரவும் இல்லை: இடைத்தேர்தல் குறித்து விஜய் கட்சி அறிவிப்பு

/

போட்டியும் இல்லை; ஆதரவும் இல்லை: இடைத்தேர்தல் குறித்து விஜய் கட்சி அறிவிப்பு

போட்டியும் இல்லை; ஆதரவும் இல்லை: இடைத்தேர்தல் குறித்து விஜய் கட்சி அறிவிப்பு

போட்டியும் இல்லை; ஆதரவும் இல்லை: இடைத்தேர்தல் குறித்து விஜய் கட்சி அறிவிப்பு

22


ADDED : ஜன 17, 2025 10:22 AM

Google News

ADDED : ஜன 17, 2025 10:22 AM

22


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தமிழக வெற்றிக்கழகம் புறக்கணிக்கிறது. எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை' என த.வெ.க., பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்தார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. களத்தில் தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளன. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பா.ஜ., மற்றும் தே.மு.தி.க., தேர்தலை புறக்கணித்துள்ளன. இந்த சூழலில், ''ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தமிழக வெற்றிக்கழகம் புறக்கணிக்கிறது. எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை' என த.வெ.க., பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்தார்.

அவரது அறிக்கை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு என்றும். அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

மேலும் தமிழகத்தில் ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றாமல் தங்களின் அதிகார பலத்துடன் பொதுத் தேர்தல்களைக் காட்டிலும், ஜனநாயகத்திற்கு எதிராகப் பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையே கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

அதனடிப்படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதையும் கழகத் தலைவர் உத்தரவின்பேரில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஆனந்த் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us