பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறுவது பற்றி முடிவெடுக்கவில்லை; சொல்கிறார் ராமதாஸ்
பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறுவது பற்றி முடிவெடுக்கவில்லை; சொல்கிறார் ராமதாஸ்
UPDATED : ஜன 12, 2026 12:23 PM
ADDED : ஜன 12, 2026 11:58 AM

சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியது குறித்த கேள்விக்கு; தேர்தல் நேரத்தில் பலவிதமான யூகங்கள், பேச்சுக்கள், உண்மையும் இருக்கும், பொய்யும் இருக்கும். ஊடகங்கள் அதை எப்படி எடுத்துக்கிறீர்கள் என்பதை பொறுத்து இருக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. நாட்கள் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விரைவில் முடிவெடுப்போம்.
தேர்தல் நேரத்தில் புதிய அணிக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படலாம், ஏற்படாமலும் போகலாம். திமுகவுடன் கூட்டணியா என்பதை உறுதிபட சொல்ல முடியாது. அதை நான் பிறகு சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

