தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கூட்டணி குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை; சொல்கிறார் ராமதாஸ்

கூட்டணி குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை; சொல்கிறார் ராமதாஸ்

கூட்டணி குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை; சொல்கிறார் ராமதாஸ்


UPDATED : ஜன 31, 2026 07:35 PM

ADDED : ஜன 31, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 31, 2026 07:35 PM ADDED : ஜன 31, 2026 07:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டிவனம்: 'பா.ம.க., யாருடன் கூட்டணி என்பது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. விரைவில் அதிகார பூர்வமாக அறிவிப்போம்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பா.ம.க., தலைமையகத்தில், ராமதாஸ் தரப்பில் கடந்த 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை கட்சியினரிடம் இருந்து சட்டசபை தேர்தலுக்கான விருப்ப மனு பெறப்பட்டது. இதையடுத்து இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமைலை, ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய 13 மாவட்டங்களை விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடந்தது.

அப்போது ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில், 'சட்டசபை தேர்தலில் பா.ம.க., சார்பில் போட்டியிடுவதற்கு 4,109 பேர் விருப்ப மனு கொடுத்தனர். இதில் முதற்கட்டமாக 13 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடந்தது. தொடர்ந்து 3 நாட்கள் நேர்காணல் நடைபெற உள்ளது.பா.ம.க.,யாருடன் கூட்டணி வைப்பது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. விரைவில் முடிவு செய்து அதிகார பூர்வமாக அறிவிப்போம். கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்' என்றார்.

கடந்த சில நாட்களாக தி.மு.க.,அரசை விமர்சித்து அறிக்கைகள் வெளியாவது குறித்து கேட்டதற்கு, 'அதெல்லாம் ஒன்றுமில்லை' என கூறினார். தொடர்ந்து அவரிடம், 'கடந்த காலங்களில் போட்டியிட்ட இடங்களில் வெற்றி பெற்ற மாதிரி, இந்த முறையும் போட்டியிடுவீர்களா என கேட்டதற்கு, 'நம்பிக்கை அடிப்படையில் தான் உலகமே இயங்குகிறது' என்றார்.

நேர்காணலில் சுவாரஸ்யம்!

இன்று துவங்கிய நேர்காணல் நிகழ்ச்சியில், 13 மாவட்டங்களை சேர்ந்த 800 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. முதலாவதாக, திருவெற்றியூர் தொகுதிக்கு விருப்ப மனு அளித்திருந்த மகளிர் அணி வழக்கறிஞர் ரஞ்சனாவிடம் நேர்காணல் துவங்கியது. தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ., திருக்கச்சூர் ஆறுமுகத்திடம், 'எவ்வளவு செலவு செய்வீர்கள்' என கேட்டதற்கு, 'எவ்வளவு தொகை என்றாலும் செலவு செய்வேன்' என பதில் கூறினார்.
'வாய்க்கு வந்ததை கூறாதீர்கள். செலவு செய்வதை மட்டும் கூறுங்கள்' என ராமதாஸ் கூறினார். நேர்காணலுக்கு வந்திருந்த நிர்வாகிகளிடம், 'கட்சியில் எப்போது முதல் இருக்கிறீர்கள். கட்சி நடத்திய போராட்டத்தில் சிறை சென்றீர்களா, தேர்தலில் எவ்வளவு பணம் செலவு செய்வீர்கள். யாருடன் கூட்டணி வைக்க வேண்டும், தனித்து நின்றால் போட்டியிடுவீர்களா' என கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு, 'யாருடன் கூட்டணி வைத்தாலும் பிரச்னை இல்லை. கூட்டணி இல்லாமல் தனித்து நின்றாலும் போட்டியிடுவோம்' என பதில் அளித்தனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us