ADDED : அக் 15, 2024 09:17 PM
அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை, எப்போதும் போல முன்னின்று செய்து, அவர்களின் துயர் துடைக்க வேண்டும். சென்னையில் வெள்ளம் தேங்காமல் இருக்க, நிரந்தர தீர்வு காண்பதற்காக, 2021ல் திருப்புகழ் கமிட்டி அமைக்கப்பட்டது.
அதன் அறிக்கை வந்து விட்டதா; அதில் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களில், தி.மு.க., அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன; எவ்வளவு மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன; எத்தனை சதவீத பணிகள் முடிவடைந்தன என்பதை, அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து, சென்னையில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொண்டது குறித்து, முழுமையாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மக்களை ஏமாற்றும் நாடகங்களை கைவிட்டு, போர்க்கால அடிப்படையில், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
-- பழனிசாமி,
அ.தி.மு.க., பொதுச்செயலர்.