ADDED : டிச 20, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'மகா கும்பமேளாவுக்கு ரயில்களில் இலவசம் இல்லை; டிக்கெட் இல்லாமல் பயணித்தால், அபராதம் விதிக்கப்படும்' என, ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், அடுத்த ஆண்டு ஜனவரி, 13 முதல் பிப்., 26 வரை மகா கும்பமேளா, 45 நாட்கள் நடைபெற உள்ளது. பொதுமக்கள் பங்கேற்க வசதியாக, மாநிலங்களில் இருந்து, 700க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்துள்ளோம்.
இதற்கிடையே, மகா கும்பமேளா சிறப்பு ரயில்களில், பயணியர் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்ற, பொய்யான தகவல் பரப்பப்படுகிறது; இது முற்றிலும் தவறானது. உரிய டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ய கூடாது. டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம்; அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.