அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது: இபிஎஸ் ஆவேசம்
அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது: இபிஎஸ் ஆவேசம்
UPDATED : அக் 17, 2026 07:51 PM
ADDED : அக் 17, 2026 07:50 PM

சென்னை: அதிமுகவின், 55வது ஆண்டு தொடக்க விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. கட்சிக் கொடியை ஏற்றிவைத்த அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், 'திராவிடன் பீனிக்ஸ்' என்ற நுாலை வெளியிட்டார்.
அவர் பேசியதாவது: இன்றைய இளம் தலைமுறையினரான, 'ஜென் சி'க்களுக்கு கட்சியின் கொள்கைகளை கொண்டு சேர்க்கும் வகையில், இந்நுால் எழுதப்பட்டு உள்ளது. கட்சியின் திட்டங்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. எம்ஜிஆர், தோற்றுவித்த அதிமுக, 54 ஆண்டுகளை நிறைவு செய்து, 55வது ஆண்டை எழுச்சியுடன் தொடங்கியுள்ளது.
எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்து, 31 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த கட்சி இது. அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது; அசைக்க முடியாது. மீண்டும் அதிமுக, ஆட்சி மலர நாம் சபதம் ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார்.
சிறப்பு வீடியோ!
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேச்சு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
