ADDED : நவ 26, 2025 07:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக கூட்டுறவுத் துறையில் பணியாளர் பணிக்காக நடத்தப்பட்ட தேர்வு நேர்மையாக தான் நடக்கிறது. அதில் எந்த முறைகேடும் இல்லை. ஓ.எம்.ஆர்., 'சீட்' மூலம் தேர்வு நடைபெற்று, கணினி தான் விடைகளை திருத்தம் செய்கிறது. அதனால், தவறுகளுக்கு வழியில்லை.
தேர்வு நடத்தப்படும் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாகவே, தேர்வு நடைமுறையில் குழப்பமோ, முறைகேடுகளோ நடந்துவிடக்கூடாது; எந்த தவறுக்கும் இடமளிக்காமல் தேர்வை நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார். அதன் வழியிலேயே செயல்பட்டுள்ளோம்.
எதை செய்தாலும் குற்றம் சாட்டுவதற்கென்றே சிலர் உள்ளனர். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. த.வெ.க தலைவர் விஜய் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு, கட்சி தலைமை சரியான பதிலடி கொடுக்கும்.
- பெரிய கருப்பன், தமிழக அமைச்சர், தி.மு.க.,

