‘அரிசி விலையை கட்டுப்படுத்த உருப்படியான திட்டம் இல்லை’
‘அரிசி விலையை கட்டுப்படுத்த உருப்படியான திட்டம் இல்லை’
ADDED : அக் 19, 2026 03:55 AM
கிருஷ்ணகிரி: ‘‘தமிழக அரசு அரிசி விலையை கட்டுப்படுத்த உருப்படியான திட்டங்களை வகுக்கவில்லை,’’ என, ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் அமைப்பு பொது செயலாளராக கரு.நாகராஜன் கூறினார்.
கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு குறைவாக உள்ளது. நாட்டில் அதிக போக்சோ வழக்குகள் பதியும் மாநிலமாக தமிழகம் உள்ளது. ஒருநாள் மழைக்கே மவுண்ட் ரோடு தத்தளித்து நிற்கிறது. ஒட்டுமொத்த சென்னை ஸ்தம்பித்துள்ளது. கடந்த தி.மு.க., போலவே, த.வெ.க., ஆட்சியும் உள்ளது.
த.வெ.க., ஆட்சியில் ஒரு சில திட்டங்களை பாராட்டலாம். அதே சமயம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மக்களை வாட்டுகிறது. அரிசி விலையை கட்டுப்படுத்த உருப்படியான திட்டங்களை வகுக்காமல், ரேஷன் கடைகளில், 30 ரூபாய்க்கு அரிசி வழங்கப்படும் என அறிவிக்கிறார்கள். சூழ்நிலை மாற்றம், மக்களை பற்றி சிந்திக்காமல், வரக்கூடிய இடைத்தேர்தலில் யாருக்கு, ‘சீட்’ கொடுக்கலாம் என யோசனையில் உள்ளனர். வரிசையாக, 26 இடைத்தேர்தல் வருமா என, தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இவ்வாறு கூறினார்.
