UPDATED : ஏப் 13, 2024 02:27 PM
ADDED : ஏப் 13, 2024 02:03 PM

திருசெந்தூர்: 'எவ்வளவு நிதி நெருக்கடி இருந்தாலும், முதல்வர் ஸ்டாலின் சொன்னதைச் செய்கிறார்' என அமைச்சர் உதயநிதி கூறினார்.
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து, தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது: கவர்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. சட்டசபைக்கு கவர்னர் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. மகளிர் இலவச பேருந்து திட்டத்தை அதிகம் பெண்கள் பயன்படுத்தியுள்ளனர். அரசு கொண்டு வரும் ஒரு திட்டத்தை மக்கள் பயன்படுத்தினால் அது அந்த அரசுக்கு கிடைத்த வெற்றி.
காலை உணவு திட்டம்
முதல்வரின் காலை உணவு திட்டத்தை இந்தியாவில் தமிழகம் தான் முதன்மையாக செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தில் தினமும் 18 லட்சம் குழந்தைகள் காலை உணவு சாப்பிடுகின்றனர். மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் சில இடங்களில் குறைகள் உள்ளது. நான் இல்லை என்று சொல்லவில்லை. அது சரி செய்யப்பட்டு நான்கு ஐந்து மாதத்தில்
தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படும்.
அதிக ஓட்டு வித்தியாசம்
வெள்ள நிவாரண நிதிக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. கனிமொழியை நிச்சயமாக நீங்க ஜெயிக்க வைத்து விடுவீர்கள் அதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. தூத்துக்குடியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இங்கு கருணாநிதி தான் வேட்பாளர். கருணாநிதியின் மறு உருவமாக கனிமொழி எம்பி இருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

