தேசிய பொது இயக்க அட்டை மூலம் இனி மெட்ரோ பார்க்கிங் கட்டணம்
தேசிய பொது இயக்க அட்டை மூலம் இனி மெட்ரோ பார்க்கிங் கட்டணம்
ADDED : பிப் 22, 2024 02:52 AM
சென்னை:மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பார்க்கிங் கட்டணத்தை, தேசிய பொது இயக்க அட்டை மற்றும் சி.எம்.ஆர்.எல்., செயலி வாயிலாக எளிமையாக கட்டணம் செலுத்து வசதியை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சித்திக் அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர், அவர் கூறியதாவது:
மெட்ரோ பயணியர் தங்களது வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை, தேசிய பொது இயக்க அட்டை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி வாயிலாக செலுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளோம்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இந்த புதிய முறை, மெட்ரோ பயணியர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர்கள் ராஜேஷ் சதுர்வேதி, அர்ஜுனன், பாரத ஸ்டேட் வங்கியின் துணைப் பொதுமேலாளர் சூரஜ் குமார் சின்ஹா உட்பட பலர் பங்கேற்றனர்.