UPDATED : மார் 21, 2024 03:13 AM
ADDED : மார் 21, 2024 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு, மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. புது கார்டு வழங்கும் பணியை, உணவு வழங்கல் துறை மேற்கொள்கிறது.
லோக்சபா தேர்தல், ஏப்., 19ல் நடக்கிறது. இதனால், நடத்தை விதி அமலில் இருப்பதால், புதிய ரேஷன் கார்டு வினியோகம் செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உணவு வழங்கல் துறை ஆணையர் ஹர்சஹாய் மீனா, மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், 'லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளவரை புதிய ரேஷன் கார்டுகள் மட்டும் கார்டுதாரர்களுக்கு வினியோகம் மேற்கொள்ள இயலாது' என, தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

