தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/கூட்டணிக்கு யாரும் அழைக்கவில்லை: தே.மு.தி.க., தகவல்

கூட்டணிக்கு யாரும் அழைக்கவில்லை: தே.மு.தி.க., தகவல்

கூட்டணிக்கு யாரும் அழைக்கவில்லை: தே.மு.தி.க., தகவல்


ADDED : பிப் 24, 2024 07:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2024 07:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை : ''தேர்தல் கூட்டணி தொடர்பாக, எங்களை யாரும் அழைக்கவில்லை'' என, தே.மு.தி.க., துணைப் பொதுச்செயலர் பார்த்தசாரதி தெரிவித்தார்.

லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சைத் துவக்கி உள்ளன. பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகளுடன், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., தனித்தனியே பேச்சு நடத்தி வருவதாகவும், இரு கட்சிகளும் ராஜ்யசபா எம்.பி., 'சீட்' ஒன்று கண்டிப்பாக வேண்டும் என்பதால், இழுபறி நீடிப்பதாகவும், தகவல் வெளியானது.

தே.மு.தி.க.,வுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்க, அ.தி.மு.க., முன் வந்துள்ளதாக, நேற்று காலை தகவல் பரவியது. இது குறித்து, தே.மு.தி.க., துணைப் பொதுச்செயலர் பார்த்தசாரதியிடம் கேட்டபோது, ''நாங்கள் இதுவரைக்கும் யாருடனும் பேச்சு நடத்தவில்லை. இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. எங்களை யாரும் அழைக்கவும் இல்லை,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us