ADDED : அக் 04, 2025 08:08 AM

அமித்ஷாவும், ஆனந்தும் விஜய்க்கு நெருக்கமானவர்கள். அவர்களின் ஆலோசனையில் தான், த.வெ.க., கட்சியை விஜய் தொடங்கினார். ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவுடன் ஒன்றரை மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டதால், கரூரில், வேண்டுமென்றே தாமதமாக பிரசார இடத்திற்கு விஜய் சென்றார். மதியம் 12:00 மணிக்கு பிரசாரத்திற்கு அனுமதி கேட்டும், மின்விளக்குகள் பொருத்தியது ஏன்? மூன்று பேரும் சதித் திட்டத்துடன் சென்றுள்ளனர்.
சினிமாவில் நடிப்பது போல அரசியலிலும் நடிக்க, அமித் ஷாவிடம் விஜய் ஒப்பந்தம் போட்டுள்ளார். கரூர் சம்பவத்தில், விஜய் மட்டுமல்ல, அவருக்கு துாண்டுகோலாக இருப்பவர்கள் மீதும் தமிழக அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். இந்த அரசு யாரையும் தப்பவிடாது. விஜய் மட்டுமல்ல, யாருடனும் ரகசிய உறவு வைக்க வேண்டிய அவசியம் தி.மு.க.,-வுக்கு இல்லை.
-- அப்பாவு, தமிழக சட்டசபை சபாநாயகர்