ADDED : ஜூலை 10, 2025 05:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அறிக்கை:
திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகே, மது போதையால், 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
வள்ளியூரில், தனியாக வீட்டில் இருந்த மூதாட்டியை நகைக்காக கொன்றுள்ளனர். தி.மு.க., ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை, எவருக்கும் பாதுகாப்பில்லை. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாததே தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

