'எனது இருக்கையில் யாரும் அமராமல் இருக்க வேண்டும்'
'எனது இருக்கையில் யாரும் அமராமல் இருக்க வேண்டும்'
ADDED : செப் 01, 2026 02:59 AM
சென்னை: சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:
சபாநாயகர் பிரபாகர்: நான் அமருங்கள் என்று சொன்ன பிறகும், அரசு கொறடா எழுந்து முன்னோக்கி வருகிறார்.
எதிர்க்கட்சி கொறடா எ.வ.வேலு, எம்.எல்.ஏ.,க்களை கழுத்தை பிடித்து தள்ளுகிறார்; வயிற்றை பிடித்து தள்ளுகிறார். அவர்கள் செல்வதில்லை.
அ.தி.மு.க., கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறினாலும், அவரது பின்னால் நிற்பவர்கள் கையை உயர்த்தி முன்னோக்கி வருகின்றனர்.
ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை, கொறடாக்கள் கட்டுப்படுத்த வேண்டும்.
தி.மு.க., - எ.வ.வேலு: சபாநாயகரின் கவனத்தை ஈர்ப்பதற்காக, எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து வருகின்றனர்.
சபாநாயகராக காளிமுத்து இருந்தபோது, நான் கையை துாக்கி பார்த்தேன்; சத்தம் போட்டு பார்த்தேன். பெஞ்ச் மேல் ஏறி நின்றதால், அவரது கவனத்தை ஈர்த்தேன். எனவே கையை உயர்த்துவது அவமதிப்பது ஆகாது.
சபாநாயகர்: பெஞ்ச் மேல் ஏறி நிற்கும் தண்டனையை, நான் கொடுக்க மாட்டேன். முன்பு நடந்ததுபோல, சபாநாயகர் இருக்கையில் யாரும் வந்து அமராமல் இருந்தால், மற்ற எல்லாவற்றையும் அனுமதிக்க தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
