பாதுகாப்பு கேள்வியே அரசியல் கேள்விதான்; ரஜினி நழுவல்
பாதுகாப்பு கேள்வியே அரசியல் கேள்விதான்; ரஜினி நழுவல்
UPDATED : ஜன 07, 2025 01:38 PM
ADDED : ஜன 07, 2025 08:09 AM

சென்னை: அரசியல் பற்றிய கேள்விகள் என்னிடம் கேட்க வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது.
இந் நிலையில் கூலி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடக்கிறது. அதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஜன.7) சென்னையில் இருந்து தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார்.
சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; கூலி படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் வரை முடிந்துவிட்டது.
அடுத்த படப்பிடிப்பு வரும் (ஜன) 13ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்கிறது என்று கூறினார். அப்போது நிருபர்களில் ஒருவர், அரசியல் தொடர்பான கேள்வி ஒன்றை கேட்க முனைந்தார்.
அவர் கேள்வி கேட்டு முடிக்கும் முன்பே குறுக்கிட்ட ரஜினிகாந்த், அரசியல் பற்றி கேள்வி கேட்க வேண்டாம் என்று நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். ஓகே, தேங்க்யூ என்று கூறிவிட்டு நகர்ந்து சென்றார்.