அக்.,21 முதல் பருவமழை அல்லாத கால அட்டவணைப்படி ரயில்கள்
அக்.,21 முதல் பருவமழை அல்லாத கால அட்டவணைப்படி ரயில்கள்
ADDED : செப் 01, 2026 04:32 AM
மதுரை: மதுரைக் கோட்டத்தில் கொங்கன் ரயில்வே வழியாக இயக்கப்படும் ரயில்கள் அக்., 21 முதல் பருவமழை அல்லாத கால அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
* திருநெல்வேலியில் இருந்து புதன் தோறும் காலை 7:30 மணிக்கு புறப்படும் ரயில் (22630), மறுநாள் மாலை 5:20 மணிக்கு பதில் மதியம் 3:00 மணிக்கு மும்பை எல்.டி.டி., செல்லும்.
மறுமார்க்கத்தில் வியாழன் தோறும் இரவு 8:45 மணிக்கு புறப்படும் ரயில் (22629), சனிக்கிழமை காலை 9:00 மணிக்கு பதில் அதிகாலை 3:55 மணிக்கு திருநெல்வேலி செல்லும்.
* திங்கள், செவ்வாய் தோறும் குஜராத் மாநிலம் ஜாம்நகர் செல்லும் ரயில் (19577), திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 5:10 மணிக்கு பதில் காலை 8:10 மணிக்கு புறப்படும்.
மறுமார்க்கத்தில் வெள்ளி, சனி தோறும் இரவு 9:25 மணிக்கு புறப்படும் ரயில் (19578), ஞாயிறு, திங்கள் கிழமைகளில் இரவு 10:05 மணிக்கு பதில் மாலை 6:20 மணிக்கு திருநெல்வேலி செல்லும்.
