ADDED : ஜன 17, 2026 01:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:
தமிழகம் உட்பட தென் மாநிலங்களில், வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு அக்., 16ல் துவங்கியது. தமிழகம், புதுச்சேரியில் ஒட்டுமொத்தமாக, இயல்பை ஒட்டிய அளவிலேயே பருவ மழை பெய்துள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை, இன்று அல்லது நாளைக்குள் விலகுவதற் கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
தமிழகம், புதுச்சேரியில், இன்று முதல், 20 வரை வறண்ட வானிலை காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

